
புதுடெல்லி: குவைத் நாட்டில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நேற்று விஷ சாராயம் குடித்த நிலையில் 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர்.