
மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராக மோகன்லால் இருந்து வந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாகத் தலைவர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
மற்ற நிர்வாகிகளும் பதவி விலகியதை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், கொச்சியில் நேற்று நடைபெற்றது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உட்பட 6 முக்கிய பதவிகள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது.