
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கட்சியின் செங்கொடியை மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.