
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளத்தின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. ரஜினிகாந்த்தின் 50-வது ஆண்டு திரைப் பயணத்துக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…