
சென்னை: வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இல. கணேசன் நேற்று காலமானார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80).
பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்துக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை வீட்டில் அவர் கால் தவறி கீழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.