
மலையாள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) தலைவர் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்று வெற்றி பெற்று, முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், நடிகர் தேவனை (132 வாக்குகள்) எதிர்த்து 159 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2024ஆம் ஆண்டு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற பிரச்னைகள் காரணமாக மொத்தமாக நடிகர்கள் பொறுப்புகளிலிருந்தவர்கள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து முக்கிய நடிகர்கள் பலரும் தலைவர் போட்டியில் பங்கெடுக்காமல் விலகிவிட்டனர்.
இந்நிலையில் ஸ்வேதா மேனன், AMMA-வை விட்டு விலகிய பெண் நடிகைகளை மீண்டும் அழைத்து ஒருங்கிணைப்பதாகவும், Women in Cinema Collective (WCC) உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியிருந்தார்.
ஸ்வேதா மேனன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், அவற்றையெல்லாம் தாண்டி தற்போது வரலாற்று வெற்றி பெற்று, முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வெற்றிபெற்றது குறித்துப் பேசியிருக்கும் ஸ்வேதா மேனன், “அம்மா நடிகர்கள் சங்கத்தின் ஒரு பெண் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இப்போது பெயருக்கு ஏற்றவாறு அம்மாவாக, பெண்ணாக மாறிவிட்டது, இப்போதுதான் முதல்முறையாக பெண் தலைமையேற்கிறது சங்கம்.

சினிமாவை பொறுத்தவரை, ஆண், பெண் வேறுபாடு இல்லை என்று நான் நம்புகிறேன்; சினிமாவில் நாம் அனைவரும் கதாபாத்திரங்கள்தான். எந்தக் கேள்விகளையும், விமர்சனங்களையும் தைரியமாக என்னிடம் முன்வையுங்கள். நான் நேர்மையுடன் இப்பொறுப்பில் பணியாற்றுவேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs