
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார்.
திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி, பாஜகவில் முழுநேர அரசியல்வாதியாகப் பணியாற்றி, கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் வகித்து, மணிப்பூர், மேற்கு வங்கம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக் கூடியவர்.
இல.கணேசன்: `அரசு ஊழியர் டு மணிப்பூர் ஆளுநர்’ – அரசியல் பயணம் ஒரு பார்வை!
இந்நிலையில் இல.கணேசன் காலமானதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும் என் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். என்னைப் போன்ற இளைஞர்கள் அரசியலில் வளர வேண்டும் என்று ஊக்குவித்தவர். எனது உரையை அவரது இதழில் வெளியிட்டவர்.” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs