• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சி​வா​னந்தா சாலை லாக் நகர் முதல் ஆர்​.ஏ.புரம் வரை 7.315 கி.மீட்​டர் நீளத்​துக்கு ரூ.31 கோடி​யில் பக்​கிங்​ஹாம் கால்​வாய் சீரமைக்​கும் பணி​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். மத்​திய பக்​கிங்​ஹாம் கால்​வாய், சேப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, மந்​தைவெளி, நந்​தனம், மயி​லாப்​பூர் மற்​றும் அதன் சுற்று வட்​டாரப் பகு​தியி​லிருந்து வடி​யும் வெள்ள நீர் கால்​வா​யாக​வும், கூவம் நதி மற்​றும் அடை​யாறு நதி​யின் மூலம் வெள்ள நீரை கடலுக்கு செலுத்​துகிற வெள்ள நீர் கடத்தி கால்​வா​யாக​வும் செயல்​படு​கிறது.

இந்​நிலை​யில், பழம் பெருமை வாய்ந்த பக்​கிங்​ஹாம் கால்​வாயை தூர்​வாரி சீரமைக்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டார். அதனடிப்​படை​யில், பக்​கிங்​ஹாம் கால்​வா​யில், சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ராஜா அண்​ணா​மலைபுரம் வரை 7.315 கி.மீட்​டர் நீளத்​துக்கு ரூ.31 கோடி மதிப்​பீட்​டில் சீரமைக்​கும் பணி​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், நீர்​வளத்​துறை அமைச்​சர் துரை​முரு​கன் ஆகியோர் சேப்​பாக்​கத்​தில் நேற்று தொடங்கி வைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *