
சென்னை: நடிகை கஸ்தூரி இன்று சென்னை தியாகராய நகரில் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், நமிஸ் சவுத் குயின் இந்தியா (Namis South Queen India) நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில், இணைந்தனர்.