
சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து, ‘தகைசால் தமிழர்’ விருது கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவித்தார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில், தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் 5-வது முறையாக ஏற்றி வைத்தார்.