
இன்று அமெரிக்கா அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் சந்திக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமே, ‘ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்’ தான்.
புதின் என்ன சொல்கிறார்?
ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து நேற்று புதின், “என்னைப் பொறுத்தவரை, தற்போதைய அமெரிக்க அரசாங்கம் மிக ஆற்றலுடனும், நேர்மையாகவும் போர்களை நிறுத்தவும், நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவரவும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் நலன்களுக்கு ஏற்ற ஒப்பந்தங்களை எட்டவும் முயற்சிகள் செய்து வருகிறது.
அமெரிக்கா நம் நாடுகளுக்கு இடையேவும், ஐரோப்பாவிலும், உலகத்திலும் நீண்ட கால அமைதிக்கான சூழலை உருவாக்க முயன்று வருகிறது.
அமெரிக்கா உடனான அடுத்தகட்ட சந்திப்புகளில், ஆயுதங்கள் சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தை எட்டினால், அது பெரியளவிலான அமைதிக்கு வழி வகுக்கும்” என்று பேசியுள்ளார்.
ட்ரம்ப் கருத்து
நேற்று ரேடியோ பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இப்போது புதின் ஒப்பந்தம் மேற்கொள்வதற்குத் தயார் என்று நம்புகிறேன்.
புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான அடுத்தகட்ட சந்திப்பில் நான் இருப்பேன்.
இன்றைய சந்திப்பு இரண்டாவது சந்திப்பிற்கு வழிவகுக்கலாம். அந்த இரண்டாவது சந்திப்பு மிகவும் முக்கியமானது.
அந்தச் சந்திப்பில் நான், புதின், ஜெலன்ஸ்கி, சில ஐரோப்பியத் தலைவர்கள் இருக்கலாம். ஒருவேளை, ஐரோப்பியத் தலைவர்கள் இடம்பெறாமல் கூடப் போகலாம்.

புதின் உடனான சந்திப்பிற்கு செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கும். அது இருவரும் இணைந்து தருவோமா என்பது தெரியவில்லை. இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.
ஒருவேளை, இந்தச் சந்திப்பு வெற்றிபெறவில்லை என்றால், நான் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, மீண்டும் வாஷிங்டன்னிற்குச் சென்றுவிடுவேன்” என்று கூறியுள்ளார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…