• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் போராட்​டம் நடத்​திய தூய்மைப் பணி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு குண்டுக்​கட்​டாகக் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று அவர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர். சென்னை மாநகராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறிப்​பதை ஒரு​போதும்அனு​ம​திக்க முடி​யாது என கருத்து தெரி​வித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *