
சென்னை: ஜப்பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையில், செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது.