• August 15, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 4 நாள் மாநில மாநாடு சேலத்​தில் இன்று தொடங்​கு​கிறது. வரும் 18-ம் தேதி வரை நடை​பெறவுள்ள இம்​மா​நாட்​டில் நாளை (ஆக. 16) நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். சேலம் பழைய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள நேரு கலை​யரங்​கில் இன்று மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு, முன்​னாள் எம்​எல்ஏ பழனி​சாமி ஆகியோர் மாநாட்​டுக் கொடியேற்றி வைக்​கின்​றனர்.

தேசி​யப் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா தொடக்க உரை​யாற்​றுகிறார். தொடர்ந்​து, அமர்​ஜித் கவுர், டாக்​டர் கே.​நா​ராயணா, ஆனி ராஜா, சி.எச்​.வெங்​க​டாசலம், டி.எம்​.மூர்த்தி உள்​ளிட்ட தலை​வர்​கள் பேசுகின்​றனர். நாளை மாலை மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்தரசன் தலை​மை​யில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்​பிலான எழுச்சி மாநாடு தொடங்​கு​கிறது. இதில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்று நிறைவுரை​யாற்​றுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *