
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். இன்னும் சில மாதங்களில் முழு வடிவம் பெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதேபோல, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படலாம். சென்னையில் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை, மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.