
புதுடெல்லி: தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணையை ரத்து செய்யக்கோரி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 திமுக ஆட்சிக் காலங்களில் தமிழக அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.