
சென்னை: இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: தமிழகத்தின் விடியலுக்காக இளைஞர்களால் உருவான இயக்கம் திமுக. இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் திமுகதான்.