• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் ஒருதலைப் பட்​ச​மாக செயல்​படு​வ​தாக கூறி உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதன், அவருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு புகார் அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வு, இது தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் வாஞ்​சி​நாதனை நேரில் வரவழைத்து விசா​ரணை நடத்​தியது.

இந்​நிலை​யில், வாஞ்​சி​நாதனுக்கு எதி​ரான நடவடிக்​கைகளை கைவிடக் கோரி உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.சந்​துரு தலை​மை​யில் ஓய்வு பெற்ற நீதிப​தி​கள் சிலர் கூட்​டாக அறிக்கை வெளி​யிட்​டனர். இதையடுத்​து, நீதி​மன்​றத்​தின் அன்​றாட நடவடிக்​கை​களில் முன்​னாள் நீதிப​தி​கள் தலை​யீடு செய்​யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *