• August 14, 2025
  • NewsEditor
  • 0

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

நாட்டு நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

மு.க.ஸ்டாலின்

பாலியல் குற்றங்கள்

“தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

போதைப் பொருள் விநியோகம்

தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது. கஞ்சா உள்பட ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்தவாறு உள்ளது.

வேலை வாய்ப்பின்மை

அரசுப் பள்ளிகளில் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்புச் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே வெளியேறுகிறார்கள்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம்

வறியநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் பிறருக்கும் இடையேயான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. சமூக பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதி என்ற நிலையாகிவிட்டது.

பாகுபாடு

பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் தாக்கப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று, இத்தனை ஆண்டுகளான பிறகும், பாகுபாடு நிலவுகிறது என்பது நாம் அவமானப்படக் கூடியது.

தமிழ் மரபின் அபிமானி மோடி

தமிழ் மொழியும் கலாசார மரபும் தேசத்தின் பெருமை. தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ்க் கலாசாரத்தின் மிகப்பெரும் அபிமானி நமது பிரதமர் மோடிதான்.” என்று பேசியிருக்கிறார் ஆர்.என்.ரவி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *