• August 14, 2025
  • NewsEditor
  • 0

Coolie – War 2

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் வார் 2 திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

இதனை முன்னிட்டு 1986ம் ஆண்டு ஹ்ரித்திக் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘பகவான் தாதா’ படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்திய அளவில் கூலி மற்றும் வார் 2 திரைப்படங்கள் போட்டிப்போடுகின்றன. ஹ்ரித்திக் சினிமாவில் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு நிறைவை வாழ்த்தியுள்ளார்.

கூலி படப்பிடிப்பில் ரஜினி

பகவான் தாதா படத்தில் நடிக்கும்போது ஹ்ரித்திக் ரோஷன் வயது 12.

தாயால் கைவிடப்பட்ட குழந்தையாக ஹ்ரித்திக்கும், நேர்மையான கிராமவாசியாக ரஜினியும் நடித்திருப்பார்கள்.

இந்தப் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ஹ்ரித்திக், “உங்கள் பக்கத்தில்தான் ஒரு நடிகனாக என் முதல் அடியை எடுத்து வைத்தேன். நீங்கள் என்னுடைய முதல் குருக்களில் ஒருவர் ரஜினிகாந்த் சார். தொடர்ந்து ஓர் உத்வேகமாகவும், தரநிலையாகவும் இருக்கிறீர்கள். திரையில் உங்கள் 50 ஆண்டு மேஜிக்கை நிறைவு செய்வதற்கு வாழ்த்துகள்!” என சமூக வலைதளங்களில் எழுதியுள்ளார்.

இன்று ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்…

இதேபோல ஹ்ரித்திக் ரோஷன் ரஜினிகாந்த் பற்றி The Roshans என்ற Netflix ஆவணப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில், “நான் அவரை ரஜினி அங்கிள் என்று அழைப்பேன். என்னுடைய வழியிலேயே அவருடன் பழகினேன். இன்று அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் முற்றிலும் வேறுவிதமாக இருப்பேன். அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் கணத்தை உணர்ந்திருப்பேன்.

அவர் மிகவும் மென்மையானவர். ஷாட்டில் நான் குழப்பினால் என் தாத்தா ‘கட்’ சொல்வார், பழியை ரஜினி சார் ஏற்றுக்கொள்வார். அதனால் குழந்தையாக இருந்த நான் விழிப்பாக இருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *