
சென்னை: “முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பழனிசாமியை வரவேற்றுவிட்டு, அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.