
சென்னை: தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ள அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 15.8.2025 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் புறக்கணிக்கிறார். அடுத்து வரும் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர் கல்வித் துறை அமைச்சர் பங்கேற்பு பங்கேற்க மாட்டார்.