• August 14, 2025
  • NewsEditor
  • 0

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிமெட்டு, ஏலக்காய் விளைவிக்கப்படுவதற்கு பெயர் பெற்ற ஒரு முக்கியமான இடமாகத் திகழ்கிறது.

பூப்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 85-ஐ ஒட்டி, போடிநாயக்கனூரை நோக்கி செல்லும் பாதையில் இந்த இடம் அமைந்துள்ளது. 17 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பகுதி, பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

இயற்கையின் எழிலை முழுமையாக அனுபவிக்க விரும்புவோருக்கு போடிமெட்டு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது, மதி மயக்கும் மலைக்காட்சிகள், இனிமையான காலநிலை மட்டுமல்ல, மனதை அமைதிப்படுத்தும் சூழலும் தான்.

கடந்த சில ஆண்டுகளில், பயணிகளின் வசதிக்காக பல புதிய ஹோட்டல்களும், ஹோம்ஸ்டேக்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தங்குவதை எண்ணி கவலைக்கொள்ளவேண்டாம். கார் அல்லது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, இயற்கையின் அழகை ரசிக்கும் வாய்ப்பை இந்த மலைப்பயணம் அளிக்கிறது.

போடிமெட்டு என்றால் வெறும் மலைகள் மட்டுமா? என்று கேட்டால் இல்லை! இங்கு படகு சவாரிகளும் பயணிகளுக்கு கிடைக்கின்றன. ஒரு மணி நேரம் சவாரி செய்ய குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே நாளில் இந்த இடங்களையெல்லாம் பார்வையிட முடியும் என்பதால், இது ஒரு தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாக உள்ளது.

இந்த அமைதியான மலைப்பகுதியைத் தேடி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.

போடிமெட்டுக்கு அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • டாப் ஸ்டேஷன் காட்சி முனை

  • டாப் ஸ்டேஷன்

  • போடி மலை

  • போடிமெட்டு காட்சி முனை

  • கொழுக்குமலை புலி முகம் பாறை

  • கெல்ல சொக்கையா கோவில்

  • கொழுக்குமலை ஆஃப்-ரோடு பயண முடிவு முனை

  • நீல குறிஞ்சி காட்சி முனை

இந்த இடங்கள் குறுகிய வார இறுதி பயணத்திற்கு ஏற்ற சிறந்த இடங்களாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *