• August 14, 2025
  • NewsEditor
  • 0

பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோவில் “ஜெசிகா ராட்கிளிஃப்” என்ற பெண் பயிற்சியாளரை திமிங்கலம் திடீரென மேலே பாய்ந்து நீருக்குள் இழுத்துச் செல்கிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த பலர், அவர் நீரில் இருந்து மீட்கப்பட்ட சில நிமிடங்களில் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். இந்த வீடியோ டிக்டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டாலும், ஜெசிகா என்ற பயிற்சியாளர் திமிங்கலத்தால் தாக்கப்பட்டதற்கு எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக இத்தகைய விபத்துகள் நிகழ்ந்தால், கடல் பூங்காக்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த சம்பவம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. வீடியோவில் உள்ள நீரின் இயக்கம், அதன் ஒலி எல்லாம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போர்ப்ஸ் இந்த வீடியோவை “வதந்தி” என முத்திரை குத்தியுள்ளது. இப்படி ஒரு பெரிய அளவிலான சோகம் நடந்திருந்தால் அது சர்வதேச செய்திகளில் இடம்பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வீடியோவின் காட்சிகள் மற்றும் ஒலிகள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவால் திரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் எந்த அளவிற்கு உண்மைத்தன்மையை சோதிக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *