தீபாவளி வந்துடுச்சு. என்ன அதுக்குள்ளேயுமா? என்று ஷாக் ஆகிவிடாதீர்கள்.
நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்போகிறது.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி வர உள்ளது. அதுவும் திங்கட்கிழமை. ஆக, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, ஆப்ஷனலாக, செவ்வாய்க்கிழமையும் லீவ் கிடைக்கும்.

புக்கிங் எப்போது?
இதையொட்டி, அக்டோபர் 17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
அக்டோபர் 18-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் சனிக்கிழமை காலை 8 மணிக்கும், அக்டோபர் 19-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கும், அக்டோபர் 20-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கட்கிழமை 8 மணிக்கும் தொடங்க உள்ளது.
இந்த நேரங்களில் ‘டான்’ என டிக்கெட் புக் செய்துவிட்டால், கடைசி நேரத்தில் அதிக விலை கொடுத்து தனியார் பஸ்களில் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அதனால், சீக்கிரம் கரெக்டா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகோங்க மக்களே!