
தெலங்கானா மாநில அரசு தடை செய்துள்ள சட்ட விரோத ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், பண மோசடி நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக அந்த விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மன்சு, நித்தி அகர்வால் உள்பட 29 திரை பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அவர்களுக்கு சம்மனும் அனுப்பி இருந்தது.