
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது.
உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், வெற்றிபெற வேண்டும் என பல்வேறு மொழித் திரையுலகின் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு:
தலைவரின் 50 ஆண்டுகள்! 50 ஆண்டுகால ஸ்டைல், 50 ஆண்டுகால தன்னம்பிக்கை. 50 ஆண்டுகால மாஸ், 50 ஆண்டுகால உயர்தரம். 50 ஆண்டுகால பவர், 50 ஆண்டுகால தீ. 50 ஆண்டுகால உணர்ச்சி, 50 ஆண்டுகால புயல். இன்னும் இவையெல்லாம் பெரிதாகிக் கொண்டே போகிறது. லோகேஷ் கனகராஜுக்கும் கூலி படக் குழுவினருக்கும் ஒரு மெகா சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டருக்கு வாழ்த்துகள்!!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி:
ஐம்பது வருட சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையில், தூய இதயத்துடனும் சிறந்த உழைப்புடனும் இன்னும் உயர்ந்து நிற்கிறார் ரஜினிகாந்த் சார். நீங்கள் ஒரு அதிசயம். குணமிக்க மனிதர்! கூலி மில்லியன் கணக்கான இதயங்களை வென்று பாக்ஸ் ஆபிஸில் லாபம் ஈட்டட்டும்! லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

இயக்குநர் பா.ரஞ்சித்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு 50 ஆண்டுகால சினிமாவை சிறப்பித்தற்கு சிறப்பு வாழ்த்துகள். திரையுலக வழியில் இரண்டு படங்களில் உங்களுடன் பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட கூலி படக்குழுவினருக்கு மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…