
சென்னை: தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும், பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவும் ரூ.23.40 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேலோ இந்தியா இளையோர் மும்முறை தாண்டுதல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ்.ரவிபிரகாஷுக்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்துக்கான நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் வழங்கினார்.