
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையர்கள் பிரியகுமார், இளம்பரிதி, நடேசன் தலைமை வகித்தனர்.
முகாமில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் ஆணையர் பிரியகுமார் பேசியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகி்ன்றன.