
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது தந்தையை போல, கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார்.
25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமண நிச்சயதார்த்த விழாவில் இரு குடும்பத்தினர் மற்றும் இரு குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சானியா பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்கும் சானியா, பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குனராகவும் இருக்கிறார். சானியாவின் ரவி காய் குடும்பம் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் உணவு வர்த்தகத்தில் சிறந்து விளங்குகிறது.
இவர்களது குடும்பத்திற்கு இண்டர்காண்டினண்டல் என்ற ஹோட்டல் இருக்கிறது. இது தவிர புரூக்ளின் க்ரீமெரி என்ற ஐஸ் கிரீம் பிராண்ட் கடைகளும் இருக்கிறது.
சானியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 805 பாலோவர்கள் இருக்கின்றனர். அதில் அர்ஜூன் மற்றும் அவரது சகோதரி சாராவும் இடம் பெற்றுள்ளனர்.
இத்திருமண நிச்சயதார்த்தம் குறித்து சச்சின் தெண்டுல்கர் குடும்பம் எந்த வித தகவலும் சொல்லவில்லை.
அர்ஜூன் தெண்டுல்கர் தற்போது கோவா உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதோடு மும்பை ஐ.பி.எல் கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

2020-21ம் ஆண்டு அர்ஜூன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மும்பை ஐ.பி.எல் மூலம் தொடங்கினார். அதற்கு முன்பு மும்பை ஜூனியர் அணியில் அர்ஜூன் இடம் பெற்று இருந்தார்.
அதிக கிரிக்கெட் வாய்ப்புக்காக அர்ஜூன் 2022-23ம் ஆண்டு கோவா உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் ஆல்ரவுண்டராகவும் இருக்கிறார்.
கோவாவில் 17 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இது தவிர 27 டி 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.