
சென்னை: கதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.