
புதுடெல்லி: உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தாங்கள் உயிரிழந்ததாக அறிவித்த தேர்தல் ஆணையம், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.