
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், வெற்றிபெற வேண்டும் என பல்வேறு மொழித் திரையுலகின் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்துகொண்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 1991-ம் ஆண்டு வெளியான அதிரடி, க்ரைம், நட்பை முதன்மைப்படுத்தும் திரைப்படம் தளபதி.
மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி முக்கிய வேடங்களில் நடித்தனர். ஸ்ரீவித்யா, அரவிந்த்சாமி, பானுப்ரியா, கீதா, ஷோபனா, நாகேஷ் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் எக்ஸ் பக்கத்தில், “திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அன்பு ரஜினிகாந்த்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டதை உண்மையிலேயே ஒரு பெருமிதமாக உணர்கிறேன். உங்களின் கூலி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். எப்போதும் உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…