• August 13, 2025
  • NewsEditor
  • 0

ரஜினி படம் ரிலீஸ் என்றால் அன்றுதான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் திருவிழா எல்லாமே நடக்கும். ரஜினி இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை ஒரு படம் என நடித்த காலங்கள் உண்டு.

அப்போது எல்லாம் வருகிற தீபாவளி, பொங்கலை ரசிக மன்றங்கள், துக்க நாளாக அறிவித்த அதிரி புதிரி சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

Rajini

அது ஒரு காலம். ஒரு படத்தில் முழுவதுமாக நடித்துக் கொடுத்து விட்டால் உடனடியாக தனது இயல்பான லுக்குக்கு மாறிவிடுவார், ரஜினி .  

தன்னுடைய படத்தின் டப்பிங்  பேசும் பணியை இரண்டே நாளில் சுடச்சுட சுறு சுறுப்பாய் பேசி முடித்து விடுவார்.

அதன் பிறகு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராகும். அந்த நேரத்தில் நாடே அதகளம், ரணகளமாகும்.

ரஜினியோ விமானத்தில் பறந்து லண்டன், சுவிட்சர்லாந்தில் கூலிங் கிளாஸ் சகிதமாக கூலாக சுற்றிக் கொண்டு இருப்பார்.  

ஒரு  காலத்தில் வெளிநாடு சுற்றுவதில் விருப்பம் காட்டியவர் ஒரு கட்டத்தில் அந்த ஆசைக்கு பெப்பே காட்டிவிட்டார். 

அதன்பிறகு தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசின் போதும் இமயமலை செல்வதை வழக்கமாக்கி கொண்டார்.  

12-12-2012-க்குப் பிறகு உடல்நிலைக் கருதி சில ஆண்டுகள் இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார் ரஜினி.

சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இமயமலை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதோ ‘கூலி’ திரைப்படம் ரிலீஸாகப் போகிறது.

Rajini in Bengaluru
Rajini in Bengaluru

ரஜினிக்கு பெங்களூரு காரில் செல்வது என்றால் அலாதி பிரியம். அதனால் நேற்று காரில் புறப்பட்டார்.  

வழக்கம் போல்  விமானத்தில் சென்றால்  ஏர்போர்ட் வளாகத்தில் கேட்கப்படும் கேள்விகளை நாசூக்காக தவிர்த்து விட்டார், ரஜினி.  

கூலி படத்தை முடித்த பிறகு பெங்களூரு சென்று அங்கிருந்து தனது ஆன்மிக சகாக்களுடன் இமயமலை , ரிஷிகேஷ்  செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் சேதத்தின் காரணமாக சாலை முழுக்க பாறைகள், கற்கள் குவிந்து கிடக்கிறது என்று அங்குள்ள ரஜினிக்கு வேண்டியவர்கள்  தகவல் சொல்ல விமான டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டனர்.

பிறகு பள்ளி விழா ஒன்றில் கலந்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *