
புதுடெல்லி: தங்களுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீண்டிய நிலையில், அதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, ‘எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவால் பாகிஸ்தானிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது. எங்கள் தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். நீங்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்" என்று அவர் கூறினார்.