
பிரமாண்டமான ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்திருக்கிறது.
இது, சீனாவின் மிகப்பெரிய கனவு ரயில் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள ஹோடானை, தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஷிகாட்ஸே உடன் இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டே இதற்கான திட்டமிடலை சீன அரசு துவங்கியிருக்கிறது. 1 லட்சம் கோடி செலவில் 2,000 கி.மீ தூரத்துக்கு இந்த இரயில் பாதை உருவாக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அக்சாய் சின்னில் இருந்து, ‘ஜி – 219’ தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் நம் நாட்டின் எல்லையை ஒட்டி இந்த ரயில் பாதை அமையவிருக்கிறது.
அக்சாய் சின் என்பது, இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வரும் ஒரு எல்லைப் பகுதி.
கடந்த 1950க்கு பிற்பகுதியில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது.
கடந்த 1962ல் நடந்த இந்திய சீன போரின்போது இந்த இடத்திற்காக நடந்த சண்டையில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இருநாட்டு எல்லைக்கும் அக்சாய் சின் ஒரு மையப்புள்ளியாக இருப்பதால், சீனா தன் படைகளை எல்லைக்கு எளிதில் அனுப்ப இது பெரும் உதவியாக இருக்கும்.

அங்கு ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில், சீனாவில் இருந்து ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்டு வருவது எளிதாகிவிடும். எனவே, இந்தத் திட்டம் இந்தியாவிற்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.
இருநாட்டு எல்லைக்கும் அக்சாய் சின் ஒரு மையப்புள்ளியாக இருப்பதால், சீனா தன் படைகளை எல்லைக்கு எளிதில் அனுப்ப இது பெரும் உதவியாக இருக்கும். அங்கு ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில், சீனாவில் இருந்து ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்டு வருவது எளிதாகிவிடும்.
எனவே, இந்த திட்டம் இந்தியாவிற்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். இதனால், நம் நாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், ஆலோசனையிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.