• August 13, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் “திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து சாதனைப்படைத்துள்ள எனது அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் ரஜினிகாந்த் அவர்களது உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.

ரஜினிகாந்த்

எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்கள், தனது அசாத்திய திறமையாலும், நடிப்பாலும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டு, தமிழக மக்களின் உள்ளங்களை எந்நாளும் மகிழ்விக்க வேண்டும் எனவும், அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும் எல்லாம் வல்ல ஆண்டவனை மனதார வேண்டுகிறேன்” என்று சசிகலா பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *