
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் வரை ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார்.
அதன் பின்னர் பல அணிகளுக்கு இடம் மாறியிருந்த அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் சில சீசன்களில் விளையாடி இருந்தார்.
அதன் பின்னர் ராஜஸ்தான், டெல்லி என பல்வேறு அணிகளுக்கு இடம் பெயர்ந்திருந்த அவர் மீண்டும் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருந்தார்.
இதனிடையே அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலக போவதாக சமுக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக அஷ்வின் விளக்கம் அளித்திருக்கிறார். “ஒரு வீரர் தன்னுடைய ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கு அணிக்கு ஆர்வம் உள்ளதா இல்லையா? என்பதை அணி நிர்வாக்கத்திடம் தெரிவிக்க உரிமை இருக்கிறது. மேலும் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்துமாறு அவர்களிடம் கேட்கலாம்.

தற்போது நானும் அதே மனநிலையிலதான் இருக்கிறேன். அதனால் அணியில் எனது நிலை குறித்து தெளிவுப்படுத்துமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…