
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘கூலி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில், நடிகை பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
‘Marrakech’ திரைப்பட விழாவின் இயக்குநர் மெலிதா டஸ்கன், உலகளவில் மிகவும் பிரபலமான இத்தாலியைச் சேர்ந்த நடிகை மோனிகா பெல்லூச்சியின் நெருங்கிய நண்பர்.
ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்தியப் பதிப்பின் ஆசிரியரான அனுபமா சோப்ரா, ‘மோனிகா’ பாடலை இயக்குநர் மெலிதாவுக்கு அனுப்பியதாக இந்த நேர்காணலில் பூஜா ஹெக்டேவிடம் தெரிவித்தார்,
‘மோனிகா’ பாடலைப் பார்த்த மெலிதா டஸ்க்ன் அந்த லிங்க்கை மோனிகா பெல்லூச்சிக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை கேட்ட மோனிகா பெல்லூச்சி, அவருக்கு அந்தப் பாடல் பிடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை நடிகை அனுபமா சோப்ரா இந்த நேர்காணலில் பூஜா ஹெக்டேவிடம் கூறினார்.

இதனை அறிந்த பூஜா ஹெக்டே, “மோனிகா பெல்லூச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நடித்த பாடலை அவர் ரசித்து வாழ்த்தியது எனக்கு மிகப்பெரிய விஷயம். எனக்குக் கிடைத்தப் பாராட்டுகளிலேயே மிகப்பெரியது இதுதான். இது எனக்கு ஒரு ஆனந்தமான செய்தி.” என்றார் நெகிழ்ச்சியுடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…