
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சிவகாசியில் உள்ள 2 பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சிவகாசியில் இருந்து வடமாநிலங்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும் 2 டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் பட்டாசு விற்பனை ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அதுகுறித்து உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.