
பெரும்பாக்கம்: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து ரூ.233 கோடி மதிப்பீட்டில் 55 மின்சார ஏ.சி. பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என மொத்தம் 135 மின்சார பேருந்துகளின் சேவைகள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.49.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனை ஆகியவற்றின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.