
12.08.2025 முக்கியச் செய்திகள்
-
தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, “தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது.” எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.
-
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினைப் புரிந்து கொண்டும், உடனடியாக வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவேண்டும் என அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
-
“தமிழகம் முழுவதும் தி.மு.க-வின் தோல்வி ஆரம்பிக்கப் போகிறது. அது தெற்கு திசையிலிருந்து ஆரம்பிக்கிறது என்று நான் தைரியமாகச் சொல்வேன். எல்லா திசைகளிலும் தோல்வி ஏற்படும்” என முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
-
குஜராத்தில் வாரிசு வேண்டும் என்பதற்காக தனது மருமகளை மாமனாரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
“வாக்கு செலுத்தி ஆள வைத்த மக்களை, உங்கள் நாட்டின் குடிகளைக் காப்பாற்றத் துப்பு இல்லை. இதில் கியூபாவைக் காப்பாற்ற பேசுவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது” என தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார் சீமான்.
-
தவெக கட்சியின் இரண்டாவது மாநாடு குறித்து, “முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில், நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு. ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள்” என அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜய்.
-
பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (Balochistan Liberation Army (BLA)) என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
-
கியூபா ஒருமைப்பாட்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் பல முறை பேசியிருக்கிறார். அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட எதிர்க்கட்சியினர் கேள்விகளாக எழுப்பினோம். ஆனால் பிரதமர் மோடி அதுகுறித்து பதிலளிக்கவில்லை. இது அவர்களின் பலவீனத்தின் அடையாளம்.” எனப் பேசியுள்ளார்.
-
தேர்தல் ஆணையம் மீது போலி வாக்காளர்களைச் சேர்த்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில். “பெங்களூரு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நமது ஆட்சியில் தயாரிக்கப்பட்டது. நாம் அதை கவனிக்கவில்லை” எனப் பேசிய கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த கே.என்.நேரு,”நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று யார் சொன்னது. 4 நாள்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கேன். நீதிமன்ற வழக்குக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம்” எனப் பதிலளித்துள்ளார்.