
புதுடெல்லி: டெல்லியில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டு உள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
இதன்படி மத்திய அமைச்சர்களுக்கு பிரிவு 4-ம் வகை பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இதேபோல 2-ம் முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரிவு 6, 7-ம் வகை பங்களாக்கள், வீடுகள் வழங்கப்படுகின்றன. முதல்முறை எம்.பி.க்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.