
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர், உலகளாவிய அழுத்தங்களும் மற்றும் இந்தியா உள்ளிட்ட ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கட்டணங்களும் மாஸ்கோவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருவதாகப் பேசியிருக்கிறார்.
#WATCH | On meeting with Russian President Vladimir Putin, US President Donald Trump says, "I'm going to meet him…Their (Russia) economy is not doing well right now because it's been very well disturbed by this. It doesn't help when the President of the United States tells… pic.twitter.com/ika9ZSwT1O
— ANI (@ANI) August 11, 2025
“ரஷ்யா மீண்டும் அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் நிலைக்கு செல்ல வேண்டுமென நினைக்கிறேன். அது மிகப் பெரிய நாடு… அவர்களது பொருளாதாரம் இப்போது சிறப்பாக இல்லை. மிகவும் கலக்கமடைந்துள்ளது” என்றார்.
மேலும், “அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் அல்லது இரண்டாவது அதிகம் எண்ணெய் வாங்கும் நாட்டிடம் (இந்தியாக் குறிப்பிட்டார்), ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் உங்கள் மீது வரி போடுவோம் எனக் கூறும்போது அது மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்” என்றுள்ளார்.
தொடர்ந்து, “வேறுயாரும் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டதில்லை, நான் அந்த எல்லையில் நிற்கவில்லை” என்றும் அறிவித்தார்.
Trump on India Tariffs: "No One Else Would Have Been So Tough & I Haven't Stopped There" pic.twitter.com/O8H4kp2egl
— RT_India (@RT_India_news) August 11, 2025
அமெரிக்கா இந்தியாவின் மீது ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரிவிதித்தது. தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு தண்டமாக கூடுதல் 25% வரியை அறிவித்தது. இதனால் அமெரிக்காவால் அதிகபட்சம் வரி விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
“இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியிருக்கிறோம்”
“வரிவிதிப்புகள் அமெரிக்காவுக்கு பணம் தருவதுடன் எதிரிகளின் மீது நம் ஆதிக்கம் செலுத்தும் சக்தியையும் தருகின்றன. நாம் இந்தியா – பாகிஸ்தான் உட்பட 5 போர்களை நிறுத்தியிருக்கிறோம்.
அஜர்பைஜான் – அர்மேனியா நாடுகள் 37 ஆண்டுகளாக பொங்கி எழுந்தன. அது முடிவுக்கு வந்தபோது, இரு தலைவர்களும் ‘நாங்கள் இது முடிவுக்கு வரும் என ஒருபோதும் நினைக்கவில்லை’ எனக் கூறினர். ரஷ்யா அதை நிறுத்த முயன்றது, அவர்கள் எல்லோரும் அதை நிறுத்த முயன்றார்கள், அது மிகவும் கடினமான சூழல், ஆனால் நாம்தான் முடித்து வைத்தோம்.” எனப் பேசியுள்ளார்.
ரஷ்யா ஒரு போரிடும் நாடு!
ரஷ்யாவும் அமெரிக்காவும் எப்போது சாதாரணமான வர்த்தக நடவடிக்கைகளுக்குத் திரும்பும் எனக் கேட்கப்பட்டபோது, “மாஸ்கோ ஒரு மதிப்புமிக்க நிலம். போரின் பாதையில் இருந்து விலகி அவர்கள் வியாபாரத்தின் பாதையில் செல்ல வேண்டும், அது ஒரு போர் புரியும் நாடு. அதைத்தான் அவர்கள் செய்வார்கள். அவர்கள் நிறைய போர்களில் சண்டையிட்டிருக்கிறார்கள். என் நண்பர் சொன்னார் ‘ரஷ்யா கடினமான நாடாக இருக்க காரணம் அவர்கள் எப்போதுமே ஏதாவது ஒரு போரில் இருப்பார்கள்’ என்று. அவர்கள் ஹிட்லரை தோற்கடித்தவர்கள். அதனால்தான் நாமும் வென்றோம்.” என்றார்.
புதின் சந்திப்பு குறித்து பேசுகையில், சந்திப்புத் தொடங்கிய இரண்டாவது நிமிடமே ஒப்பந்தம் செய்யப்படுமா இல்லையா எனத் தெரிந்துவிடும் என்றார்.