
கடந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான ‘4 S’ என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித உருவ ரோபோக்கள் உள்பட, தேநீர் தயாரிக்கிற, உணவு வழங்குகிற என நுகர்வோரின் தேவையறிந்து அவர்களுக்கு உதவி செய்கிற வகையில் பல ரோபோக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நான்கு மாடி ரோபோ மால், 4,000 சதுர மீட்டருக்கு மேல், ஏழு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்த வீட்டு உதவியாளர் ரோபோக்கள், செல்லப்பிராணிகள், இயந்திரங்கள் இந்த ரோபோ மாலில் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி குறைதல் மற்றும் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற சவால்களை சமாளிக்க சீனா ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடு செய்துள்ளது. தவிர, சீன அரசாங்கம் AI மற்றும் ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு டிரில்லியன் யுவான் நிதியை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த ரோபோ மாலுக்கு செல்பவர்கள், ரோபோட்டிக் தீம் ரெஸ்ட்டாரண்டில், சில ரோபோக்கள் சமைக்க, சில ரோபோக்கள் பரிமாற, சாப்பிட்டப்படியே ரோபோக்களின் ராக் இசைக்கச்சேரியை கேட்கலாம். குழுவாக நடனமாடும் ரோபோக்களை கண்டு ரசிக்கலாம். சிறிய ரக ரோபோ நாயுடனும், செஸ் விளையாடும் ரோபோக்களுடனும் விளையாடலாம். பார் அட்டெண்ட்டர்கூட ரோபோ தான்.

‘ஆயிரக்கணக்கான வீடுகளில் ரோபோக்கள் நுழைய வேண்டுமென்றால், ரோபோட்டிக்ஸ் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது போதாது’ என்கிறார் இந்தக் கடையின் நிர்வாக இயக்குனர் வாங் யிஃபான். இங்கு தற்போது விற்பனையில் உள்ள ரோபோக்களின் விலை இந்திய பணத்தில் 24,000 முதல் சில கோடிகள் வரை இருக்குமாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…