
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில எம்பிக்கள் மின்டா தேவி (Minta Devi) என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் தேர்தல் ஆணையத்தின் உயிரை பறித்துவிட்டார்கள்.