• August 12, 2025
  • NewsEditor
  • 0

குஜராத் மாநிலம் வதோதரா அருகே வசிக்கும் ரஞ்சன் (பெயர் மாற்றம்) என்பவர் மகனுக்கு திருமணமான நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வந்தனர்.

தற்போது ரஞ்சன் மீது, அவரது 40 வயது மருமகள் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், ”கடந்த ஆண்டு எனக்கு திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்றேன். சில மாதங்களில் எனது மாமனார் மற்றும் மாமியார் என்னிடம் உனக்கு வயதாகிவிட்டதால் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றும், அதனால் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஆனால் எனது கணவரின் விந்துவை சோதனை செய்து பார்த்ததில் அதில் கவுன்டிங் குறைவாக இருந்தது.

எனவே அவரால் எனக்கு குழந்தை கொடுக்க முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டது. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு சிகிச்சை வேண்டாம் என்றும், குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் எனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த எனது மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதனை எதிர்த்து சத்தம் போட்டதற்கு என்னை அடித்துவிட்டார்.

இது குறித்து எனது கணவரிடம் காலையில் தெரிவித்தபோது, எனக்கு குழந்தை வேண்டும், எனவே அமைதியாக இரு என்று கூறி என்னை அமைதிபடுத்தினார்.

அப்படி எதாவது புகார் செய்ய நினைத்தால் எனது ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனை தொடர்ந்து பல முறை எனது மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். ஆனால் குழந்தை உண்டாகவில்லை. இதையடுத்து எனது கணவர் சகோதரியின் கணவர் திடீரென ஒரு நாள் எனது அறைக்குள் வந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதன் பிறகு அவர் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததில் நான் கர்ப்பமானேன். ஆனால் எனக்கு கருத்சிதைவு ஏற்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *