
பாலிவுட் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டிங்கில் இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவிக்கொண்டிருந்தது.
அடிக்கடி தனுஷ் மும்பை வந்து மிருணால் தாக்குருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செல்வதாகவும் வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
தனுஷ் சகோதரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மிருணால் தாக்கூர் பாலோ செய்தார். மிருணால் தாக்குர் நடித்த சன் ஆப் சர்தார் பட அறிமுக விழாவிலும், மிருணால் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் நேரில் வந்து கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இது தொடர்பான செய்திக்கு தனுஷ் தரப்பில் எந்த வித விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், மிருணால் தாக்கூர் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”தனுஷ் எனக்கு நல்ல நண்பர். சன் ஆப் சர்தார் 2 பட நிகழ்ச்சிக்கு நான் அழைத்து தனுஷ் வரவில்லை. அஜய்தேவ்கன் அழைத்துதான் அவர் வந்திருந்தார். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மிருணால் தாக்கூர் தென்னிந்திய படங்களில் நடித்தபோது அவருக்கு தனுஷுடன் நெருக்கம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.