
நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று (ஆகஸ்ட் 11), மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டத்தை நிறைவேற்றினார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்கிறதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார்.
புதிய வருமான வரிச் சட்டம்
புதிய வருமான வரிச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய வருமான வரிச் சட்டத்தை ஆய்வு செய்ய பாஜகவைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா தலைமையில் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழு இந்தச் சட்டத்தில் 285 திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தது.
தேர்வுக்குழு குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான திருத்தங்களுடன், நேற்று வருமான வரிச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படாது என்பதைத் திட்டவட்டமாக நிர்மலா சீதாராமன் அறிவித்துவிட்டார்.
நேற்று (ஆகஸ்ட் 11) மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “கடுமையான நிதிச்சுமை காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. அதனால், தேசிய ஓய்வூதியத் திட்டம்தான் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…