
சென்னை: 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடையும் ‘தாயுமானவர் திட்டம்’ உள்ளிட்ட அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘தாயுமானவர் திட்டம்’ தொடங்கிவைக்கப்படுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.